Wednesday, December 8, 2010

குயிலே




கோவிந்தன் குணம் கூவாய் - குயிலே !
கோவிந்தன் குணம் கூவாய் ...

திருமகள் நேயன் ; திகழொளி மார்பன் ..
தீரம் உணர்ந்த தருணமதிலே

வந்தனை செய்வோரின் குந்தகம் நீக்கிடும்;
வாழ்க்கை படகினை கரை தனில் ஏற்றிடும்;
தாசனின் மனதினை காதலில் நெகிழ்த்திடும்;
குணம் கூவாய்; சுகம் காண்பாய் ..
குயிலே !!!

Friday, December 3, 2010

வேங்கட ரமணா...



திருமலையில் வாழும் வேங்கட ரமணா..
அருள் மழையை பொழியும் ஆனந்தநிலையா..
மனமொன்று உண்டு மறை புகழும் வேந்தா
உனைஅங்கு வைத்தேன் ஒரு வரம் நீ தாராய்!..
உனை அன்றி உலகில் உறவேதும் இல்லை ..
உன் நினைவையன்றி உணர்வேதும் இல்லை ..
வனமாலை தரிக்கும் ; வசுதேவன் மைந்தா
தாசனுக்கிரங்க தாமதம் ஏனோ!!

Monday, November 29, 2010

பிரிவாற்றாமை

என் கண்களாலே கண்டேன் கண்ணா
நீ கோபியர் கூவிட ஓடிடும் அழகினை .. என்..

உன் நெஞ்சினில் நேசமில்லை!! நினைத்திட ஆசை இல்லை!
பரிவென்ன பாறையில் மலர்ந்திடுமா?...

மாயவன் அணிந்துள்ள மாலையே நீ கேளு !
ஓயாமற் பருகுவேன் நாமாம்ருத பாணம்..
உறவென்ன ஊடலில் உடைந்திடுமா ?

Sunday, October 3, 2010

ஹோலி


வண்ணங்கள் அள்ளி தெளிக்காதே கண்ணா
ஹோலியன்று புத்தாடை மேல்..

தோழியர் குழாம் கேளி செய்யும்..
உன் ஜாலம் கண்டால், மணிவண்ணா
(வண்ணங்கள் ...)

வானவில் மின்னி ஒளிர்ந்திடும் போதுன்..
காதலில் நனைந்திட காத்திருக்கையிலே,
வானவில் வண்ணங்கள் வாரியெடுத்தென்
எண்ணத்தை முறித்திட முடிவு செய்து..
(வண்ணங்கள் ...)

Wednesday, September 15, 2010

Still We love..


When the one you love may not love you..
Or the one may not realize the depth in your love..
or they love someone else..

Those unnoticed words which you spelt out in true care..
Those drizzle showering window side when you wanted to have a hot sip together..
Those neglected gifts which are embraced by dusts..
Those silky chocolate papers which reflects their face..
Those unanswered questions for which you had to crave for at least a nod..
Those cold and fever nights when you longed for the dear's caressing fingers..
Those undelivered supports when your self-respect was tampered..
Those unarguable moments while you 're mesmerized by the eyes..
Those fine mornings when you identified your cheeks with tear marks..
More and more...
These are all that love can give you..

Still we love... :)

Wednesday, September 8, 2010

Sharat - The Conjurer


தேவன் ஒருவன் வந்தான், தீ நிறத்து ஆடையில்
திக்கெட்டும் தெளித்தான் தெவிட்டாத இன்பங்களை!!

பனிக்காற்று வருட இலக்கின்றி திரிந்தோம்
ஒன்றாய் கழித்த தருணங்கள்
உறைந்து கிடக்கின்றன உள்ளத்தில்.. dd

கால நேரம் தெரியாது அவன் காட்டும் அன்பிற்கு
அன்பைத்தவிர வேறொன்றும் தெரியாது அவனுக்கு

என் பற்று போதவில்லை
அவன் அளித்த நேசவரவை நிகர் செய்ய.. dd
இருநாள் விடைபெற்ற போது
மறுநாள் பார்ப்பது உறுதி!
இறுதிநாள் விடைபெற்றேன்
என்று பார்ப்பேன் என்றறியாத வெறுமையுடன்
அறையில் வந்தமர்ந்தேன் தனிமையுடன் ..

அவனுடன் இருந்ததென்ன வெறும்
ஏழு மணிநேரமா ? - இல்லை
எத்தனையோ நொடிப்பொழுது வாழ்க்கைகள் ! dd

இவையெல்லாம் என்ன மிகைபடுத்தல்களா ? - இல்லை
அவனளவு நேசிக்க முடியாத தாபத்தின் வெளிப்பாடு !

இந்த பிரிவு என்ன சாபமா? - இல்லை
இறைவன் என்மேல் கொண்ட செல்ல கோபம் ... dd

Sunday, September 5, 2010

பார்வை


உன் காந்த பார்வையில் காதல் மலர்ந்ததே!
மலரும் மணமும் போலவே உன்னோடு உறைய வேண்டுமே !

துழாய் மாலை அழகினிலே ..
என் உள்ளம் கொள்ளை போனதே !

என் நினைவில் நிலைத்த கள்வனே
கருணை பொழிவாயே!

Gud Nyt!!


You hurt me by saying good night..

Wandered among the starts in search of a light..

Shocked to see the stars to fight..

Waited to look at your eyes in the twilight..

Its my heart that craves you to accept..

Its time for sleet, don be separate...

Sunday, August 29, 2010

காத்திருப்பு


கடைக்கண் காண காலம் இன்னும் கனியவும்
வேண்டுமா? குமரா..!

மாலைப் பொழுதினில் - வான்
நீல மயிலின் மிசை - பூக்
கோல குறமகளை
காதலிக்கும் கருணை .. (கடைக்கண்..)

குன்று தோறும் கோயில் கொண்டாள்பவனே
என்னையிங்கு ஆள மறந்தனையோ!
கடும் வெயிலிலும் உறை பனியிலும்
உனை காண ஏங்கித் தவிக்கின்றேன்!
துணையிங்கு நீயே ! துயர் தனை துடைப்பாயே ! (கருணை கடைக்கண்..)

Sunday, August 22, 2010

ஏக்கம்


நெகிழ்ந்து போவேன் உன் முகம் நான் கண்டால்..
நெஞ்சம் கேட்பதில்லை நீ இறைவன் என்றால்..

கண்ணில் நீர் தேக்கி கடலை காண்பித்தேன்..
கண் மை மிகுதியில் கண்டேன் ஷ்யாமளனை..
மண்ணை துழாவி அவன் தடம் கண்டுகொண்டேன்..
கமலங்களும் மலர்ந்தன! கனப்பொழுதும் உறக்கமில்லை..

சிலிர்த்து விட்டது சிந்தையில் வந்தாயோ!
நில் அன்பே! என்னை நிலைகுலைய செய்யாதே!

தோஷம்


கண்ணீர் வடித்தேன்...
கைக்குட்டைகளை நனைத்தேன் ..
முகம் சிவந்தேன் ..

குரலிலொரு மாற்றம்..
காணவில்லை உடல்நிலையில் தேற்றம்..
உணர்ந்தேன் இந்த தண்டனைக்கான குற்றம்..

போதவில்லை போர்வை ஒன்று..
பணிக்காற்று சுடுகிறது..
பகலிரவு தெரியவில்லை..
பாயில் நெளிகிறது உடல்..
நீ காதலித்தது போதும்..
என்னை விட்டு விடு-
ஜலதோஷமே !!

Friday, August 20, 2010

பணி


இதே பணி இணைத்தது!
இதே அறை மறைத்தது!
இதே நிலவு சிரித்தது!

சந்திக்க நினைவிருந்தும் தூரம் அதிகம் ..
அவளுக்கு உணரும் என்ற நினைவில் பேசிக்கொண்டே இருக்கும் மனம்
நினைவலைகளை தூது அனுப்பியும் கனவில் கூட பதில் வரவில்லை...

சித்தம் தெளியாமல் பிதற்றுகிறேன்,
என்னையறியாமல் நான் உன்னிடம் தொலைந்து போகிறேன்,
பார்க்கும் முகங்களிலெல்லாம் உன் அடையாளம் தேடுகிறேன்,
யாரும் என்னுடன் பேசுவதை வெறுக்கிறேன்,
தனிமையில் தகித்துக் கொண்டிருக்கின்றேன் ...

யார்?
யார் நீ?
என்னை தனிமைச் சிறையிலிருந்து மீடடாதவளே!
இதே பணி என்னை உணர்த்தியதா?


Thursday, August 19, 2010

Krishna and Me


Does not the breeze fire you to scribble a poem?
Does not my charm tempt you to love?
Does not the solitude make you feel ashamed?
Does not a melody make you provoked?
Does not a tear drop a truth?
Does not a look convey you my agony?
Does not flower make you feel my touch?
Does not my age convey you the assault?
Does not any words remind you the promise?
Does not any moon prompt you that we had once met?
Anything which I do makes your presence more permanent in me!
I develop a deep love towards you!
You are spreading across my soul as my only spouse!
Figuring out those Vrindavan days since sinking madly in love!
Meet me early!
I just cant able to imagine days without you!

Loneliness


Once again I am left alone

Measuring the depth of darkness

Telling bedtime stories to myself

Waiting for my redeemer to break the silence

I can play chess as if I am two

Of course, I am confused that whom of them should win

The portrait I draw has got no colours

It is obvious that deserts hardly see flowers..