Sunday, May 22, 2011

மாயலோகமோ உன் பார்வை


ஓயாமற் அழைத்தும் ஒருமுறையும் வாராதது தகுமா?
வேயாமற் கிடத்திய விளைந்த மூங்கிலென வீணாகவோ?
தீயாக தென்றல் வீச தீரா நீ கற்ப்பித்தனையோ ?
நோயோ நஞ்சோ என் தனிமையின் முன் செல்லுமோ?

மாயலோகமோ உன் பார்வை நான் எனை மறக்க.!
பாயாமற் பதுங்கி நிற்க பாவிமனம் கருதுவதென்னே ?
பொய்யா மேகமென விழிகள் பொழிவதை காணாயோ ?
மையாக நானும் பவவெயிலில் கருத்திருப்பதை அறியாயோ?

வாயார நேசம் விளம்ப உன் வாய்மணம் மாறிடுமோ?
தூயாயே துஞ்சவோர் துணையில்லா துயர் உணராயோ ?
ஐயோ! ஆயர் குல தீபமே என்னை எரிக்காதே ..
மேயாத உன் லீலைகளுக்கு என்னை இரையாக்காதே!!

5 comments:

  1. எப்படி இப்படியெல்லாம்! அருமை!

    ReplyDelete
  2. நன்னா எழுதறே சங்கர் வாழ்த்துகள் ஆசிகள்.

    ReplyDelete
  3. ப்ளாக்ல மயிலிறகும் ராதா க்ருஷ்ணர் படங்களும் மனசை கொள்ளை கொள்கின்றன

    ReplyDelete