
எண்ணெய் பிசுக்கனென்றுமா இயம்புவேன் ?..
கட்டியணைக்க..
விரல் சுட்டிக் காண்பித்தே பரிகசிக்கும்
வெட்டி வஞ்சியரின் வாய்க்கு அவலானேன்..
கட்டியணைக்க..
திட்டித் தீர்க்கும் தாயின் சொல்லும் தட்டி - தினைத்
தட்டினை வட்டமிடும் சிட்டெனவே வந்தேன்
கட்டிலை நனைத்திடும் கண்ணீரை நிறுத்தி
மட்டிலா மகிழ்ச்சி மனமெங்கும் பொங்க நீ..
கட்டியணைக்க..