Sunday, August 22, 2010

ஏக்கம்


நெகிழ்ந்து போவேன் உன் முகம் நான் கண்டால்..
நெஞ்சம் கேட்பதில்லை நீ இறைவன் என்றால்..

கண்ணில் நீர் தேக்கி கடலை காண்பித்தேன்..
கண் மை மிகுதியில் கண்டேன் ஷ்யாமளனை..
மண்ணை துழாவி அவன் தடம் கண்டுகொண்டேன்..
கமலங்களும் மலர்ந்தன! கனப்பொழுதும் உறக்கமில்லை..

சிலிர்த்து விட்டது சிந்தையில் வந்தாயோ!
நில் அன்பே! என்னை நிலைகுலைய செய்யாதே!

4 comments: