நாற்ச்சந்தியிலே எதிர்ப்பட்டாய்..
நாடோடி நீ, கனவாளி நான்!
நாடோடி நீ, கனவாளி நான்!
மெல்லிசையும் மோகமுமாய கோர்வை நம் பார்வை.
பேரிடத் தேவையில்லை, உன் புன்னகை என் முதல் அனுபவம்.
பேரிடத் தேவையில்லை, உன் புன்னகை என் முதல் அனுபவம்.
அருகே இருக்கையில் அமைதி காண்பதில்,
ஐயமேதும் இல்லை, அன்பே நீ யாரென்பதில்.
தென்றல் அங்கு சேர்ந்து என்னுள் தீயினை மூட்டுகையில்,
கொண்டலோ கூடி குளிர்மழை பிடித்ததே..
உன் குழாமை அடைய நீ விரைந்தாய்.
என் குழந்தையைத் தூக்கி நான் நகர்ந்தேன்.
என் குழந்தையைத் தூக்கி நான் நகர்ந்தேன்.
நாடோடி நீ, கனவாளி நான்!